மெலிந்தவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்: ஆய்வில் தகவல்

0
314

imageமெலிதாக இருப்பவர்கள் நீண்ட ஆயுள் சாத்தியம் கொண்டவர்கள் என்று அமெரிக்காவின் ஹார்வர்ட் மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக் கழக் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மாறாக சிறுபிராயம் முதல் நடுத்தர வயது வரை உடல் பருமனாக இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வில் 80,266 பெண்கள், 36,222 ஆண்கள் கலந்து கொண்டு தாங்கள் 5, 10, 20, 30, 40 வயதுகளில் இருந்த உடல் எடைபற்றி குறிப்பிட்டார்கள்.

மேலும் 50 வயதில் உடல் எடை குறியீடு என்னவென்பதையும் இவர்கள் குறிப்பிட்டனர். இவர்களிடம் அளிக்கப்பட்ட கேள்வி பதில் வடிவமான விண்ணப்பத்தில் அவர்களது வாழ்க்கை முறை, மருத்துவத் தகவல்கள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி வந்த அவர்களது உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விசாரிக்கப்பட்டது.

இந்த தகவல்கள் மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்டதில் மெலிதாக இருந்து வருபவர்கள் நீண்ட ஆயுள் கொண்டவர்களாகவும், சிறுபிராயம் முதலே உடற்பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுட்காலம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது கண்டறியப்பட்டது.

அதாவது சிறுபிராயம் முதல் அதிக உடல் எடையுடன் 40 வயது வரை எடை குறையாமல் கூடிக் கொண்டே செல்பவர்களின் ஆயுட் காலம் 40 வயதிலிருந்து 15 ஆண்டுகள் நீடிக்கவே வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பிஎம்ஐ என்பது உடல் எடை மற்றும் உயரத்தை வைத்து கணக்கிடப்படுவது. உடலின் கொழுப்பை தீர்மானிக்கும் அளவு கோலாக இது இருந்து வருகிறது.

எனவே பிஎம்ஐ அதிகம் என்றால் அவர்களது ஆயுட் காலம் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று கண்டறியப்படுகிறது. ஆனால் அதிக உடல் எடை என்பதையும் ஒபீசிட்டி என்ற உடல் பருமன் நோய் என்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த ஆய்வின் மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் சிலரது உடல் எடை புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கவழக்கங்களால் குறைந்து இருக்கும் இதனால் இவர்கள் ஒல்லியாக இருந்தால் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று அர்த்தமல்ல, ஏனெனில் புகைப்பிடித்தல் ஒருவரது ஆயுளைக் குறைக்கிறது என்பதே அறிவியல் தகவல். இந்த ஆய்வில் புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை இந்த ஆய்வுக்கு இவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

LEAVE A REPLY