எதுக்கு எடுத்தாலும் paracetamol போடுபவர்களா நீங்கள்?

0
287

a12d5762-e2e0-11e4-_888444cதற்போது பலரும் தங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை என்றால் கண்களை மூடிக் கொண்டு கண்ட மாத்திரைகளை வாங்கிப் போடுவார்கள். அப்படி ஏராளமான மக்கள் மருத்துவரின் பரிந்துரையின்றி போடும் ஓர் மாத்திரை தான் பாராசிட்டமல். பலரும் தலைவலி, காய்ச்சல், உடல் வலி என்று எதற்கு எடுத்தாலும் பாராசிட்டமலைத் தான் போடுகிறார்.

ஆனால் இப்படி பாராசிட்டமலை ஒருவர் அடிக்கடி எடுத்துக் கொண்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இங்கு ஏன் மருத்துவர் பரிந்துரைக்காமல் பாராசிட்டமல் மாத்திரையை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

கல்லீரல் பாதிப்பு

ஆம், ஒருவர் பாராசிட்டமல் மாத்திரையை அளவுக்கு அதிகமாக வருடக்கணக்கில் எடுத்து வந்தால், அதனால் கல்லீரல் கடுமையாக பாதிக்கக்கூடும். ஒருவர் ஒரு நாளைக்கு 3 கிராம் பாராசிட்டமலுக்கு மேல் எடுக்கக்கூடாது என்று டாக்டர் சல்லானி கூறுகிறார். எனவே பாராசிட்டமலை எடுக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

இரைப்பை அழற்சி

சில நேரங்களில், பாராசிட்டமலை அதிகம் எடுப்பதால் இரைப்பை அழற்சி ஏற்படும். ஆகவே உங்களுக்கு பாராசிட்டமல் எடுத்த பின், வயிறு உப்புசமாகவோ அல்லது செரிமான பிரச்சனைகளை சந்தித்தாலோ, உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் அது பாராசிட்டமலின் பக்க விளைவினால் ஏற்பட்டவையாக இருக்கும்.

அழற்சி

பலருக்கும் பாராசிட்டமல் ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி மற்றும் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும் என்பது தெரியாது. ஆனால் எவர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பாராசிட்டமல் மாத்திரையை எடுக்கிறாரோ, அவருக்கு அழற்சி ஏற்பட்டு சருமத்தில் கடுமை அரிப்பை சந்திக்கக்கூடும்.

அரைத் தூக்க நிலை

பாராசிட்டமலை அதிகம் எடுப்பதால் சந்திக்கும் பக்க விளைவுகளில் ஒன்று அரைத்தூக்க நிலை. ஆகவே என்ன தான் காய்ச்சல், சளி இருந்தாலும், மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரையின் பேரில் எந்த ஒரு மருந்து மாத்திரையையும் எடுங்கள்.

கல்லீரல் செயலிழப்பு

உங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் நோய் அல்லது மஞ்சள் காமாலை இருந்தால், பாராசிட்டமல் எடுத்துவிடாதீர்கள். ஏனெனில் அது கல்லீரலை கடுமையாக பாதிப்பதோடு, கல்லீரலை செயலிழக்கச் செய்துவிடும். ஆகவே கவனமாக இருங்கள்.

சிறுநீரக பாதிப்பு

முக்கியமாக பாராசிட்டமலை அதிகமாக எடுத்தால், சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்படும். எனவே தேவையில்லாமல் பாராசிட்டமலை மருத்துவரின் பரிந்துரையின்றி அதிகம் எடுக்காதீர்கள்.

LEAVE A REPLY