சம்மாந்துறை இரண்டு பிரதான ஹொட்டல்களுக்கு சீல்

0
24

03-1பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள இரண்டு பிரதான ஹொட்டல்களை மறு அறிவித்தல் வரும் வரை மூட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிரப்பித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத பொருட்களை அழித்துவிடவும் உத்தரவிட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.சபீர் ஆலோசனைக்கு அமைவாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹொட்டல்கள், இறைச்சிக் கடைகள், மரக்கறி விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தை என்பன நேற்றுமுன்தினம்(05) மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பீ.பேரம்பலம் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் பரிசேதனை மேற் கொண்டனர்.

இப் பரிசோதனையின் போது இனங்கானப்பட்ட நான்கு ஹொட்டல்களுக்கும், மூன்று இறைச்சிக் கடைகளுக்கும் எதிராக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன அத்துடன் இந்த இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட மக்களின் பாவனைக்கு உதவாத பொருட்களை அழித்துவிடுமாறும் அதிகாரிகளுக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் உத்தரவிட்டார்.

இம் முற்றுகையின் போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களையும், அசூத்தமான பாத்திரங்கள் மற்றும் எண்ணை வகைகளைப் பயன்படுத்திய சம்மாந்துறையிலுள்ள இரண்டு பிரதான ஹொட்டல்களை மறு அறிவித்தில் வரும் வரை மூட கட்டளை பிரப்பித்துள்ளார்.

-ET-

LEAVE A REPLY