ஸ்காட்லாந்து தேர்தல்: 3-ஆவது முறையாக தேசியவாதக் கட்சி வெற்றி

0
144

42பிரிட்டனின் அங்கமான ஸ்காட்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சி மூன்றாவது முறையாக வெற்றியடைந்தது. எனினும், ஆட்சியமைப்பதற்குரிய தனிப் பெரும்பான்மையை அது இழந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. அதன்படி, ஆளும் ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக இடங்களைப் பிடித்து தனிப் பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.

எனினும், மொத்தமுள்ள 129 இடங்களில் கடந்த முறை 69 இடங்களில் வெற்றி பெற்ற அந்தக் கட்சி, இந்தத் தேர்தலில் 63 இடங்களையே வென்றுள்ளது. இதனால், பசுமைக் கட்சி போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சி ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 3-ஆவது முறையாக தாங்கள் பெற்றுள்ள வெற்றி, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவதற்கான தங்களது கொள்கைக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்று அந்தக் கட்சியின் தலைவர் நிகோலா ஸ்டர்ஜன் தெரிவித்தார்.

பிரிட்டனில் ஸ்காட்லாந்து தொடரலாமா, வேண்டாமா என்ற பொதுவாக்கெடுப்பை இரண்டாவது முறையாக நடத்தும் முயற்சிகளை மேற்கொள்ள இந்த வெற்றி உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தலில் இரண்டாவது இடத்தை கன்சர்வேடிவ் கட்சி பிடித்தது. தொழிலாளர் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

LEAVE A REPLY