கென்யா கட்டட விபத்து: 6 நாட்களுக்கு பிறகு பெண் உயிருடன் மீட்பு

0
134

201605070641547406_Woman-found-alive-six-days-after-Kenyan-building-collapse_SECVPFஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடந்த மாதம் 29-ந் தேதி தலைநகர் நைரோபியில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசார், மீட்புபடையினர் என நூற்றுக்கணக்கானோர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களின் அயராத முயற்சியால் விபத்து நேரிட்டு 3 நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கட்டிட இடிபாடுகளில் இருந்து 1½ வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்டிட இடிபாடுகளுக்குள் பெண் ஒருவர் உயிருடன் இருப்பதை மீட்புபடையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து நீண்ட நேர போராட்டத்துக்கு பின் அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் விபத்து நேரிட்ட 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு உள்ளார்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்து உள்ளது. அந்த பெண் உள்பட 137 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY