முற்பகல் 11.30 –1.30 காலப்பகுதியில் மாணவர்களை வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம்

0
12

schoolநாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வெப்பநிலை அதி­க­ரித்து காணப்­ப­டு­வதால் முற்­பகல் 11.30 மணி முதல் பிற்­பகல் 1.30 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் பாட­சாலை மாண­வர்­களை வகுப்­ப­றையை விட்டு வெளியில் செல்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டா­மென சுகா­தார போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு பாட­சாலை அதி­பர்­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­ட்டுள்ளதாவது,

கடந்த சில மாதங்­க­ளாக பல மாவட்­டங்­களில் வெப்­ப­நிலை அதி­க­ரித்து காணப்­ப­டு­கி­றது. அதி­க­ரித்த வெப்­ப­மா­னது பாட­சாலை மாண­வர்­களை அதி­க­மாக பாதிக்கச் செய்­கின்­றது.

எனவே மாண­வர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அந்த வகையில் வெயில் அதி­க­ரித்த காலப்­ப­கு­தியில் மாண­வர்­களின் வெளிப்­பாட விதா­னங்­களை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு அமைச்சு ஆலோ­சனை வழங்­கு­கி­றது.

மேலும் வகுப்­ப­றை­களில் கத­வுகள், ஜன்­னல்கள் திறக்­கப்­பட்ட நிலையில் காற்­றோட்­ட­மான சூழலில் மாண­வர்­களின் கற்றல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்ல நட­வ­டிக்கை எடுப்பதோடு முடிந்த வரை மாணவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Virakesari

LEAVE A REPLY