தண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர்கள் பலி

0
387

Jaffnaகோண்டாவில் பகுதியில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை கோண்டாவில் புகையிரத நிலையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் கோண்டாவில் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், விபத்துச் சம்பவம் குறித்த கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

#Virakesari
#Adaderana

LEAVE A REPLY