இலங்கையும், மலேசியாவும் வியாபார நட்புறவைப் பேண உறுதி மொழி

0
174

(ஏ.எல்.எம். றிபாஸ்)Hizbullah with malaysiaஇரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த மலேசியாவினுடைய சர்வதேச வியாபார கைத்தொழில் அமைச்சர் டாக்டர் முஸ்தபா முகம்மதை மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.. ஹிஸ்புல்லாஹ் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்குமிடையிலே வியாபாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இலங்கையின் பல்வேறுபட்ட முதலீடுகளில் கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குவதில் மலேசியாவினுடைய பங்களிப்பு கோருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே இலங்கையினுடைய தொலைத்தொடர்பு துறையிலே மலேசியாவினுடைய டயலொக் நிறுவனம் ஆற்றுகின்ற சேவையைப் பாராட்டியதோடு எதிர்காலத்திலே கைத்தொழில் துறையில் வாகனங்களை உற்பத்தி செய்தல் உட்பட பல்வேறு பட்ட கைத்தொழில் துறையிலே இலங்கைக்கு தங்களுடைய பூரண அனுபவத்தையும் தங்களுடைய ஆதரவையும் தருமாறு இராஜாங்க அமைச்சர் மலேசிய பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.

மலேசிய அமைச்சரோடு மலேசிய சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம், மிடா நிறுவனத்தின் தலைவர் உட்பட, பல்வேறுபட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY