புத்தளம் அக்கறைபற்று மு.கா. ஒன்றியம் உதயம்

0
188

(அப்ஹாம் என் ஷபீக்)

SLMC Logoபுத்தளம் மாவட்டத்தில் புழுதிவயல் தொடக்கம் கொத்தாந் தீவு வரையான சுமார் 10 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அக்கரைபற்று முஸ்லிம் காங்கிரஸ் கிளைக்கு உற்பட்ட பிரதேச இளைஞர்களால் “புத்தளம் அக்கறைபற்று மு.கா. ஒன்றியம்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸினதும் புத்தளம் உயர்பீட உறுப்பினர்களினதும் கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பு கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் பிரதேச அபிவிருத்தி குறித்து சொயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளது.

இதன் தலைவராக மௌலவி சன்ஹீரும் செயளாளராக ஜெஸீம் ரஹ்மானும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவ் அமைப்புக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமினது அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY