கல்முனை – மூதூர் வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

0
779

(வாழைச்சேனை நிருபர்)

1கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதியான கல்முனை மூதூர் பிரதான வீதி மிக நீண்டகாலமாக புணரமைக்கப்படாமல் உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து அவ் வீதியை புணரமைப்பு செய்வதற்கு இருபத்தி நாலு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி மற்றும் அதனுடன் இணைந்த அந் நூர் தேசிய பாடசாலை வீதி என்பன கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிக முக்கியமான வீதியாகும் இவ் வீதி கல்முனை மூதூர் பிரதான வீதிக்கு பயன்படுத்துவதுடன் ஓட்டமாவடியில் இருந்து பாசிக்குடா கடற்கரைக்கும் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்கும் செல்வதற்கு பொதுமக்கள் பயன் படுத்தவது வழக்கம் இவ் வீதி மிக நீண்ட காலமாக புணரமைக்கப்படால் இருந்த இவ் வீதி தொடர்பாக கடந்த மாதம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

7செய்தி ஒளிபரப்பப்பட்டதைத் வெளியானதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரயவதி கலபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இவ் வீதியில் 1.66 கிலோ மீற்றர் வீதி காபட் வீதியாக அமைப்பதற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை இருபத்தி நாலு மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாகவும் இதன் பூர்வாங்க வேலைகள் எதிர்வரும் 2017ம் வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் இச் செய்தியை சுற்றிக்காட்டிய ஊடகங்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

4

LEAVE A REPLY