பகிடிவதை – மேலும் 4 மாணவர்கள் கைது; கைதானவர்கள் சட்ட மருத்துவரிடம் முன்னிலை

0
188

arrest-student-256x180நீண்ட காற்­சட்டை அணியக் கூடாது என தெரி­வித்து புதி­தாக களனி பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்றுச் சென்ற மாண­வியை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு அப்பல்­க­லைக்­க­ழ­க சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 7 பல்கலைகழக மாணவர்களும் இன்று ராகம சட்ட மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கிரிபத்கொட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைதானவர்கள், பிட்டபெத்தர, ஊருபொக்க, நிட்டம்புவ, ருவன்வெல்ல மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரி­பத்கொடை பொலிஸ் நிலை­யத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வாக மேற்கொள்ளப்பட்ட விசா­ர­ணை­க­ளின் அடுத்து இதற்கு முன்னர் நான்கு மாணவிகள் உட்பட ஐவ­ரை கைது செய்­த­தாக களனி பொலிஸ் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தேச­பந்து தென்­னகோன் தெரி­வித்தார்.

-ET-

LEAVE A REPLY