நேபாளத்தில் நில அதிர்வு

0
9

10461758_Gநேபாளத்தில் வியாழக்கிழமை மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவான அந்த நில அதிர்வு, அந்த நாட்டின் கூர்க்கா மாவட்டத்தில் காலை 10.31 மணிக்கு ஏற்பட்டதாக நேபாள நில நடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

தலைநகர் காத்மாண்டுக்கு 600 கி.மீ. தொலைவில் உள்ள காளிகோட் மாவட்டத்தில் 5 ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வு புதன்கிழமை ஏற்பட்ட நிலையில், மீண்டும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 8,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, இதுவரை ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளுக்கும் அதிகமாகப் பதிவான 452 பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

LEAVE A REPLY