பிரதியமைச்சர், எம்பிக்கு சபைக்கு வர ஒரு வார தடை

0
89

41544e8cbf414d54983ef97fd585b53e_Lஇரு பாராளுமன்ற குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மோதல் காரணமாக நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் பிரதியமைச்சர் பாலி்த தெவரப்பெரும மற்றும் எம்பி பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பதற்கு ஒரு வார கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சபையில் ஏற்பட்ட மோதலின் தொடர்பில் சபாநாயகர் ஊடாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, செயற்குழுத் தலைவர் எஸ். அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கபட்ட முன்மொழிவிற்கமைய குறித்த இருவரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் சபாநாயகரூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதுடன் அவைத்தலைவர் லஷ்மன் கிரியெல்ல ஊடாக சபைக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அவை அனுதித்ததுடன் குறித்த தீர்மானம் இன்று (06) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

LEAVE A REPLY