10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை!

0
134

Ball Test Cricketஇந்தியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நாஜில் என்ற வீரர் ஒரு இன்னிங்சில்10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

கேரளாவில் மாவட்ட அளவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் கன்னூர், மலப்புரம் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய மலப்புரம் அணி நாஜில் வேகத்தில் ஆட்டங்காண முதல் இன்னிங்ஸில் 26 ஓட்டங்களுக்கு சுருண்டது. 9.4 ஓவர்களை வீசிய நாஜில் 12 ஓட்டங்களுக்கு1 0 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிகழ்வு இரு முறை நடந்துள்ளது.

1956ல் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 53 ஓட்டங்களுக்கு 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன்பிறகு டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய சுழல் வீரர் கும்ப்ளே 74 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தற்போது இந்த வரிசையில் கேரள வேகப்பந்து வீச்சாளர் நாஜில் உள்ளூர் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

முன்னதாக 1996ல் விஜய்மெர்சண்ட் டிராபி தொடரில் ஷ்யாம் என்பவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY