கனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து – 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்

0
109

201605060406146328_Wildfire-guts-large-swath-of-Canadian-city_SECVPFகனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட் மெக்முர்ரேயில் ஆயிரத்து 600 கட்டுமானங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த நிலையில் அங்கு வசித்து வந்த 80 ஆயிரம் பேர், வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறுகின்றனர்.

அந்த நகரின் பெரும் பகுதி தீயில் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன

LEAVE A REPLY