அன்பு மறவா நண்பர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு!

0
199

(S.சஜீத்)

20160506_090453காத்தான்குடியில் பிறந்து வட்ஸ் அப் குழும்மத்தின் மூலம் அவர்களது அன்பான உறவுகளை பல நாடுகள் கடந்து அதாவது, கட்டார், சவூதி அரேபியா, குவைத், டுபாய் மற்றும் இலங்கை போன்ற இடங்களில் இருந்து அவர்களது அன்பு மறவா உறவுகளை பேணி வரும் நண்பர்கள் குழாமின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி, பெரிய ஜூம்ஆ பள்ளிவாலுக்குச் சொந்தமான மைய்யவாடியில் இன்று (06) வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிமுதல் 10.00வரை மாபெரும் அன்பு மறவா நண்பர்கள் ஒன்று சேர்ந்து மனிதநேயம் பேணும் மகத்தான சிரமதான நிகழ்வொன்று நடைபெற்று முடிந்தன.

20160506_094822இதன்போது குறிப்பிட்ட மைய்யவாடியை அன்டிக் காணப்படுபவர்கள் மற்றும் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மஹல்லாவாசிகள் என்று பலரும் கலந்து கொண்டு இவ் மஹத்தான பணியில் பங்கேடுத்தனர்.

மேலும், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் மைய்யவாடியினுல் நுழையும் போது ஓதப்படும் துஆ மற்றும் பல விடயங்கள் உள்ளடங்கிய விழிப்புணர்வு பதாதைகளும் பொறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சிரமதான நிகழ்வில் கலந்துகொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

20160506_073144 20160506_074408 20160506_090442 20160506_091034

LEAVE A REPLY