அரச ஊழியர்களின் கடமை உணர்வு

0
1487

(ஜுனைட் எம்.பஹ்த்)

பாடசாலை நேரத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவன் மரக்கறி கடையில் நின்றது அவதானிக்கப்பட்டு அது தொடர்பாக விசாரித்த போது டீச்சருக்கு மரக்கறி வாங்க வந்ததாக அந்த மாணவன் தெறிவித்துள்ளான்.

இந்த சம்பவம் காத்தான்குடியில் நடைபெற்றள்ளது.

பாடசாலை நேரத்தில் மாணவர்களை சொந்த தேவைக்கு பயண்படுத்தலாமா?

பாடசாலை நேரத்தில் பாடசாலையில் வரவை பதிந்துவிட்டு தனது சொந்த வேலை பார்ப்பதற்கு மார்க்கட் போகும் அதிபர்களும், ஆசிரியர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களின் கடமை உணர்வு இவ்வாறு இருக்கும் போது மாணவர்கள் எவ்வாறு கல்வியில் முன்னெறுவது?

அதே போல, சில அரசாங்க உத்தியோகத்தவர்களின் கடமை உணர்வும் இவ்வாறே இருக்கிறது.

பொதுமக்கள் தேவை முடிப்பதற்கு இவர்களிடம் போனால் அலுவலகத்தில் வரவு உறுதி செய்யப்பட்டிருக்கும் ஆனால் அவர்களது ஆசனங்கள் காலியாக இருக்கும். இவர்கள் வரும் வரை மணிக்கணக்கில் மக்களின் காத்திருப்பு அவல நிலை!!!

இதுதான் இவர்களின் கடமை உணர்ச்சி. இவர்களின் ஊதியம் ஹராமா? ஹலாலா?
அல்லாஹ்விடம் எவ்வாறு பதில் சொல்வார்கள்?

Kattankudy Student in shop

LEAVE A REPLY