(Poem) டெக்ஸ்டைல்ஸ்

0
128

textile_industry(Mohamed Nizous)

தரை மேல் பிறக்க வைத்தான் – சிலரை
துணிமணி விற்க வைத்தான்
கடையிலே இருக்க வைத்தான் – சிலர்கள்
கண்டபடி மாறு செய்வார்.

செக்குக்கு பழைய ஸ்டொக்கை விற்று
சிக்க வைப்பார் சிலபேர்.
விற்காத பொருளுக்கு
விலையைக் குறைத்து
விளம்பரம் செய்வார் பெரிதாய்
எண்பதில் வந்த சாரியைக் காட்டி
இதுதான் ‘கபாலி’ என்பார்.
சிம்புட போட்டோ சேட்டை விற்பார்
சில தையல் உள்ளே பிரிந்து.

ஒன்றும் தெரியாதவன்
உள்ளே வந்தால்
அன்று அறுந்தான் அங்கே.
இந்தியா சாரன் என்று சொல்லி
இளக்காரம் விற்பார் இங்கே.
ஒரு பொருள் எடுத்தால் மறு பொருள் freeயாம்.
ஒவ்வொரு பொருளிலும் அறுப்பார்.
ஒரு ஜாண் குறைத்து அளப்பதன் முடிவை
உணர்வார் இறுதியில் பாவம்
உணர்வார் இறுதியில் பாவம்

LEAVE A REPLY