சிறுமி சூடு விவகாரம்: தந்தை, வளாப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்

0
219

(விஷேட நிருபர், ஏ.எச்.ஏ. ஹுஸைன், பழுலுல்லாஹ் பர்ஹான்)

court judgementsகாத்தான்குடியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத்தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்குமான விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரவு மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இரு சந்தேக நபர்களும் இன்று (06) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20.5.2016ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களிருவருக்கும் பிணை வழங்குமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை மனு விண்ணப்பம் ஒன்றினை செய்தனர். இந்த பிணை மனு விண்ணப்பத்தினை நீதிபதி நிராகரிதிதார்.

குறித்த சிறுமியின் சார்பில் சட்டத்தரணிகளான பிறேம்நாத், எம்.றிஸ்வி மற்றும் ரொஸானி ஆகியோரும் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கண்ணன், மற்றும் அமீன், சுலோஜன், விஜயகுமார் மற்றும் அஜ்மீர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிசார் கடந்த 13.03.2016 அன்று கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி 54 நாட்களாக தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY