அண்டி-வைரஸால் நன்மையை விட தீமைகளே அதிகம்: கனடா ஆராய்ச்சியாளர்கள்

0
546

the-best-antivirusகணினியில் பாதுகாப்பிற்காக இயங்கும் அண்டி-வைரஸால், ஒன்லைன் பண பரிவர்த்தனைகள், வங்கி சேவைகள் பாதுகாப்பாக செயல்படுவது இல்லை என ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கனடாவின், Montreal-ல் உள்ள Concordia பலகலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

கணினிகளில் இணையம் மற்றும் இணையம் மூலமான வங்கி சேவைகள், பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அண்டி-வைரஸ் பயன்படுத்தப்படும்.

ஆனால் அவ்வாறு பாதுகாப்பிற்காக பயன்படுத்தும் அண்டி-வைரஸ்கள் தான் தீமையை விளைவிப்பதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில், பெரும்பாலும் பலராலும் பயன்படுத்தப்படும் 14 அண்டி-வைரஸ்களை சோதனை செய்துள்ளனர்.

அந்த அண்டி-வைரஸ்கள் அனைத்தும், கணினிகளை பாதுகாக்கும் என்றும், வைரஸ்களை அணுகவிடாமல் தடுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

ஆனால் இந்த ஆராய்ச்சியில் பலமுறை சோதித்தும், அவை நன்மையை விட தீமையையே அதிகம் விளைவித்துள்ளது தெரியவந்துள்ளது.

அவை அனைத்துமே பெரும்பாலும், பிரவுசர்கள் வழங்கும் பாதுகாப்பு அளவினை விட குறைவான பாதுகாப்பையே வழங்கியுள்ளதோடு, சிலசமயங்களில் தீவிர பாதுகாப்பு குறைபாட்டையும் அவை ஏற்படுத்தியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

#Technews

LEAVE A REPLY