அம்பாரை மாவட்டத்தில் 55390 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை

0
575

(எம்.எம்.ஜபீர்)

DCM004அம்பாரை மாவட்டத்தில் தற்போது பெரும்போக வயல் விதைப்பு வேலைகள் ஆரம்பமாகி விவசாயிகள் மும்முரமாக விதைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாரை மாவட்டத்தில் இம்முறை 55,390 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய சேனாநாயக்க சமுர்த்திரத்தின் நீர்பாசனத்தின் திட்டத்தின் கீழ் 52650 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும், சிறு குளங்களை மையப்படுத்தி 2740 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் வேளாண்மை செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

இதேவேளை 3 மாதம் அல்லது 3 1/2 மாதத்தில் விளைச்சலை தரக்கூடிய AP 362, BG 94/1, BG 300, BG 357 ஆகிய விதை நெல் இனங்களை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு விவசாய கேந்திர நிலையத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் மேலும் தெரிவித்தார்.

DCM002 DCM003 DCM005

LEAVE A REPLY