குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவு

0
141

Parliament-Sri-Lanka-interior55 மில்லியன் ரூபாவுக்கான அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பிரேரணைக்கு சாதகமாகவும் எதிராகவும் தலா 31 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்தப் பிரேரணை 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் சிலரால் கணக்கெடுப்பு தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, மீள வாக்குகள் எண்ணப்பட்ட வேளை சமநிலையில் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#Adaderana

LEAVE A REPLY