பிரெட் குலோப் ஜாமூன் செய்வது எப்படி

0
171

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் – 12
பால் – 2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
பாதாம் பருப்பு – தேவையான அளவு
முந்திரி பருப்பு – தேவையான அளவு
திராட்சை – தேவையான அளவு
நெய் – தேவைக்கு

செய்முறை :

* 2 கப் பாலை நன்றாக காய்ச்சி 1 கப்பாக வரும் வரை சுண்ட காய்ச்சி வைத்து கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரைந்து கம்பி பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* பிரெட் துண்டுகளில் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* பொடித்த பிரெட் தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நெய் 2 ஸ்பூன், சுண்ட வைத்த 1 கப் பால் ஊற்றி நன்றாக மாவு உருட்டும் பதத்தில் மென்மையாக பிசைந்து கொள்ளவும். இதை 10 நிமிடம் மூடி வைக்கவும்.

* ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய பருப்பு, ஏலக்காய் தூள், திராட்சை, சர்க்கரை பாகு 1 ஸ்பூன் கலந்து தனியாக வைக்கவும்

* சிறிது மாவை எடுத்து கைகளால் கிண்ணம் போல் உருட்டி அதன் நடுவில் சிறிது கலந்து வைத்துள்ள நட்ஸ் கலவையை வைத்து மூடி மென்மையாக உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு உருண்டையும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் ஊற வைத்து 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான இனிப்பான நட்ஸ் பிரெட் குலோப் ஜாமூன் ரெடி.

குறிப்பு :

* பொரிக்க நெய்க்கு பதிலாக எண்ணெயும் உபயோகிக்கலாம்.

* நட்ஸ் உடன் விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்து விடலாம்.

* பாலை காய்ச்ச நேரம் இல்லாதவர்கள் தண்ணீர் சேர்க்காத திக்கான பால் 1 கப் சேர்த்து கொள்ளலாம்.

* உங்களுக்கு விருப்பமான எந்த நட்ஸ் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY