இம்ரான் MP யின் முயற்சியால் புல்மோட்டை சிறுகடல் மீனவர்களின் பிரட்சினைக்கு தீர்வு

0
161

(சை. மு.ஸப்ரி)

574edf94-3cff-414e-97fc-6ed4f7b993e0புல்மோட்டை தொடக்கம் கொக்கிலாய் பிரதேசத்தில் சுமார் 2500-3000 மீனவர்கள் கூட்டு வலை மூலம் பாரம்பரிய மீன்பிடி முறையை கையாண்டு மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் கூட்டு வலை தடை செய்யப்பட்ட வலையாக அறிவிக்கப்பட்டதால் இப்பிரதேசத்தில் இம்முறைமூலம் மீன்பிடிக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. இத்தடையினால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இப்பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்றுகொடுக்கும் நோக்கில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் ஏற்பாட்டில் கடல்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மீனவர்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அமைச்சரிடம் மீனவர் சங்க பிரதிநிதிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்ட அமைச்சர் அப்பகுதியில் தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி அளித்து இவ்வனுமதியை உடனே அமுல்படுத்தும் படி கடல்தொழில் திணைக்கள பணிப்பாளருக்கும் அறிவித்தார். அத்துடன் அப்பகுதிகளில் உரிய ஆய்வுகளை முன்னெடுத்த பின்னர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பின்றி இப்பிரட்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY