நாட்டை சீரழித்தவர்களே தற்போது பாராளுமன்றத்தையும் சீரழிக்கின்றனர்: இம்ரான் MP

0
177

776a8594-e466-4f02-9f3d-4c3ae2e73858நாட்டை சீரழித்தவர்களே தற்போது பாராளுமன்றத்தையும் சீரழிக்கின்றனர் என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப். கொழும்பில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினரின் அலுவகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ,

நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை ) பாராளுமன்றத்தில் நடந்தது யாராலும் ஏற்றுகொள்ள முடியாததொன்று களியாட்ட விடுதிகளில் குழுக்கள் சண்டை இடுவது போன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டுக் கொண்டனர் கடந்த ஆட்சியில் நாட்டை சீரளித்தவர்களே இன்று பாராளுமன்றத்தையும் சீரழிக்கின்றனர்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பாகவே கூட்டு எதிர்கட்சியினரால் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கவே அமைச்சர் சரத் பொன்சேகா முற்பட்டார். அவர்களுக்கு மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை இருப்பின் அமைச்சர் சரத் பொன்சேகா பேசியதன் பின் அவர்களின் சந்தேகங்களை பாராளுமன்றத்தில்கேட்டிருக்க முடியும். இவ்வாறாக சக பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்க வேண்டிய தேவை கிடையாது. இதை வைத்துப்பார்க்கும்போது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டு வந்தவாறே தோன்றுகிறது. கிருலப்பனையில் இடம்பெற்ற மேதின நிகழ்வு தோல்வியடைந்த மன உளைச்சளிலையே இவ்வாறு செய்கின்றனர்.

முன்னால் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கூறி ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை தொடர்ந்தால் இனி பாராளுமன்றத்துக்கு செல்லும்போது பாதுகாப்பு கவசத்துடனையே செல்லவேண்டி ஏற்படும்.

LEAVE A REPLY