ACMC ஆதரவாளர்கள் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

0
48

(ஏ.எல் றியாஸ்)

03ae5269-0c8a-4775-be33-d0c7d1312786அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான கலாநிதி எம்.ஏ.சீ முகம்மது றியாஸ் கட்சியின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியின் சகல பதவிகள் மற்றும் செயற்பாடுகளிலுமிருந்தும் விலகிக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை நேற்று முன்தினம் (3) கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்பே தனது ஆதரவாலர்கள் சகிதம் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். இதன்போது வன்னிமாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானும் கலந்துகொண்டார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தடம் பதிப்பதற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் கலாநிதி றியாஸ் முன்னின்று செயற்பட்டவர். அதுமட்டுமில்லாது மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த றியாஸ் அட்டாளைச்சேனை பாலமுனை ஒலுவில் நிந்தவூர் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அக்கட்சியின் மீது நம்பிக்கையிழந்து அதிருப்தியுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கலாநிதி றியாசின் வெளியேற்றம் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்ப்படுத்துமெனவும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியுற்ற அக்கட்சியின் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY