மதிப்பீட்டுப் பரீட்சையில் ஆசிய கண்டத்தில் முதலாம் இடம்: காத்தான்குடி மாணவன் சாதனை

0
291

(எம்.ரி.எம்.யூனுஸ்)

MM. Mufthiகாத்தான்குடியில் இயங்கிவரும் Unique சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் முனாஸ் றுஸ்தா தம்பதிகளின் புதல்வன் எம்.எம்.முப்தி அஹமட் சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான மதிப்பீட்டுப் பரீட்சையில் ஆசிய கண்டத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய New South Wells University நடாத்தும் உலகலாவிய ரீதியில் 20 இலட்சம் பேர் ஆங்கில மொழியில் பங்கு பற்றும் அகில உலகப் பரீட்சையில் தரம் மூன்று மட்டத்திற்கான கணிதப் பாடத்தில் ஆசிய கண்டத்தில் முதலாம் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தையும் சான்றிதழையும் எம்.எம்.முப்தி அஹமட் பெற்றுக்கொண்டார்.

இவரை கெளரவிக்கும் நிகழ்வு Unique சர்வதேச பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான டாக்டர் அஹர் மதனி தலைமையில் இன்று 05.05.2016 வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திற்குமான அமைப்பின் பணிப்பாளர் சல்மா அமீர் ஹம்ஸா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்தோடு இக்கல்லூரியில் கல்வி பயிலும் பதினாறு மாணவ மாணவியர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் விஷேட சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

b622e5b4-4d47-47c5-8267-7e4f741de657

ae191cb5-535b-4106-a251-4dabc56c9d37

865c314d-27c6-4560-8d45-0f8b5106b77c

f8ef2dbd-85b4-464a-9148-c20689661273

LEAVE A REPLY