பகிடிவதை களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது

0
15

anti raggingகளனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் தான் பலமுறை பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக, மாணவி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று குறித்த 5 மாணவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY