(Poem) லேட்டஸ்ட் பித்தலாட்டங்கள்

0
17

Nisous(Mohamed Nizous)

பெண் ஐடி கண்டால்
பெரியதாய் சலாம் போடல்
அண்ணர் என அறிந்த பின்
அப்படியே நழுவல்

பேஷ் புக்கை ஹெக் பண்ணி
பிறர் பெயரில் log ஆகி
தூஷனத்தால் போஸ்ட் போட்டு
ஏசியவனை பழி தீர்த்தல்

பக்கத்து wifiயின்
பாஸ்வேர்ட்டைத் திருடி
மக்கத்து வீடியோவை
மற்றவர்க்கு அனுப்பல்

வைபரில் neighbourக்கு
வசைபாடி திட்டல்
பொய்பெயர் ID கொண்டு
சைபர் கிரைம் செய்தல்.

சற்றிலே செற்றாகி
சிற்றின்பம் காணல்
மற்றவரின் குற்றத்தை
சுற்றி வர செயார் செய்தல்.

அடுத்தவன் வீடியோவை
ஆப் மூலம் பதிவிறக்கி
எடுத்தவன் பெயர் நீக்கி
இண்டனெற்றில் புகழ் பெறல்

பிடிக்காத ஜமா அத்தில்
அடிக்கடி குறை தேடி
அடிக்கின்ற கொமண்ட்ஸ்களில்
அவதூறு பாடல்.

வட்ஸ் அப்பில் புளக் செய்தால்
வைபரில் வருதல்.
இஷ்டம் போல் போட்டோவை
எடிட் செய்து தூற்றல்.

எல்லா ஆட்டமும்
இப்போது சுவைக்கும்
பொல்லாத நேரம் வரும்
புரட்டி வதைக்கும்.

LEAVE A REPLY