அபிவிருத்தி தொடர்பில் அறிய வேண்டுமா? இதோ அவசர இலக்கம்

0
200

Help hotlineஅபிவிருத்திக்கு உட்படுத்தப்படும் வீதிகள் மற்றும் பாலங்கள் தொடர்பான பிரச்சினைகளை அறிந்துகொள்ள வேண்டுமாயின் 1968 என்ற அவசர அழைப்பினைத் தொடர்புகொண்டு, தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்க்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினால், இந்த அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, எந்தவொரு தொலைபேசியினூடாகவோ அல்லது அலைபேசியினூடாகவே, மேற்படி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

தங்களது பயணத்துக்கான சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் மூலம், எதிர்நோக்கவிருக்கும் சிரமங்களிலிருந்து மீண்டுவிட முடியும் என்பதோடு, பயணத்துக்கான காலம், தூரம் என்பவை தொடர்பிலும் இவ்வழைப்பின் மூலம் தகவல்களைப் பெற முடியும் என அமைச்சு மேலும் கூறியது.

LEAVE A REPLY