பாராளுமன்ற கைகலப்பு: தேவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒரு வார தடை

0
193

பாராளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டை அடுத்து, பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும (ஐ.தே.க.) மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகிய இருவருக்கும் பாராளுமன்ற நடவடிக்கையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது, குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டது.

குறித்த தாக்குதல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தீத் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த இருவரும் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY