பாலமுனைக் கிராமத்தின் பின்தங்கிய பகுதிக்கு அப்துர் ரஹ்மான் விஜயம்

0
137

8b3e3872-1ba6-4c10-8def-7efe6207e298காத்தான்குடி பாலமுனைக் கிராமத்தில் மிவும் வறிய மக்கள் வாழும் பிரதேசமான C.I.G வீட்டத்திட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் கள விஜயம் ஒன்றினை மேற் கொண்டிருந்தார்.

அங்கு வசிக்கும் மக்கள் நடந்து கூடச் செல்ல முடியாத அளவு மோசமான மணல் ஒழுங்கைகளாகக் காணப்படும் இடங்களை கிறவலிட்டு போக்குவரத்திற்கேற்ற வீதியாக அமைத்தத் தருமாறு அப்பகுதி வாழ் மக்கள் பொறியாலாளர் அப்துர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் இந்த அடிப்படைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் முடியுமான அளவு விரைவில் இதற்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இந்த விஜயத்தின் போது NFGG யின் சிரேஷ்ட உறுப்பினர் ASM ஹில்மி மற்றும் பாலமுனை பிரதேச NFGGயின் செயற்குழு உறுப்பினரான MAM சியாட் , மற்றும் அல்-ஹஸனாத் பள்ளிவாயலின் முன்னாள் தலைவர் இஸ்மாயில், புர்கான் பள்ளிவாயலின் தலைவர் M. மன்சூர் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY