(Update) காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்: தந்தை மற்றும் வளரப்புத் தாய்க்கு நாளை பிணை வழங்கப்படுமா?

0
14

(விஷேட நிருபர்)court judgements

காத்தான்குடி-05ல் 10 வயது சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி) மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களது வழக்கு இன்று (05) வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவருக்கும் நாளை வரை (06) விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Update:

காத்தான்குடியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத்தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்குமான விளக்க மறியல் நாளை (06) வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரவு மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இரு சந்தேக நபர்களும் இன்று (05) வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறித்த இரு சந்தேக நபர்களையும் நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் இந்த சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்துமாறும் இதன் போது நீதிபதி உத்தரவிட்டார்.

காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிசார் கடந்த 13.3.2016 அன்று கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY