வாழ்வாதார உதவிகளை அவரவர் ஆற்றல்களை கண்டறிந்து பிரயோசனமுள்ளதாக தெரிவுசெய்து வழங்க வேண்டும்: சிப்லி பாறுக்

0
176

(எம்.ரீ. ஹைதர் அலி)

சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு தனக்கு ஏதேனும் வாழ்வாதார உதவி ஒன்றினை செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் ஒரு வயதான தாய் வேண்டுகோள் விடுத்தார்.

தனக்கு சிறியதொரு மரக்கறி வியாபாரம் ஒன்றினை மேற்கொள்வதற்கு உதவுமாறு கேட்ட அந்த தாய்க்காக தானே அத்தாயை அழைத்துக்கொண்டு சந்தைக்கு சென்ற பொறியியலாளர் சிப்லி பாறுக் பொருட்களை கொள்வனவு செய்தும் மேலதிகமாக ஒரு தொகைப்பணமும் கொடுத்து சிறியதொரு வியாபார உதவியை வளங்கி வைத்தார்.

மற்றவர்களில் தங்கி வாழாமல் தங்களது முயற்சியினால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். வாழ்வாதார உதவிகள் செய்யும் விடயத்தில் வெறுமனே நாங்கள் பொருட்களை கொடுப்பது மாத்திரமல்லாமல் பிரயோசனமடைய வேண்டிய விதத்தில் வாழ்வாதார உதவிகள் அமைய வேண்டும்.

இதன்போது தன்னால் உதவி வழங்கப்பட்ட நபர் வியாபாரத்தில் ஈடுபட்டமையை கண்டு மிகவும் சந்தோசமடைந்த பொறியியலாளர் சிப்லி பாறுக் இவ்வாறு மற்றவர்களையும் ஊக்குவிப்பதோடு, அவர்களுக்கு எந்தெந்த சுயதொழில்கள் செய்யமுடியுமோ அதனை சிறியளவிலேனும் ஆரம்பித்து தங்களது தொழில்களை பெருக்கிக்கொள்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வியாபரிகளுடன் உரையாடும் போது தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது வியாபாரிகளின் நிலைமை அவர்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் சம்பந்தமாகவும் கேட்டறிந்ததோடு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஆரையம்பதி பிரதேச சபை ஊழியர்களோடும் அளவளாவினார்.

2b87d5a7-e6d1-4939-8044-62e1267d8c74

2f84c355-89ba-4512-96eb-0a87ecd669e9

073f9421-bd12-4c68-b8b1-77f97f5c4d9b

484293bd-f02a-4787-9f49-2dea9ba0c2e2

LEAVE A REPLY