கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரம் நிந்திக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

0
197

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

tna1-1024x6832மட்டக்களப்பு வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற அந்த நிகழ்வில் கருணாகரம் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கையில் நபர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி இடையூறு செய்து வன்முறையைத் தூண்டும் வண்ணம் செயற்பட்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் எமது ஆதரவாளர்களை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களை தவறான பாதைக்குத் திசை திருப்பலாம்.

எனவே இதுபோன்ற விபரீதமான செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் வழிகோல வேண்டாம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டு அறிக்கையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஸ்ரீநேசன், சீ. யோகேஸ்வரன், ச. வியாழேந்திரன் ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை அமைச்சர் கி. துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான என். இந்திரகுமார், ஞா. கிருஷ்ணபிள்ளை, மா. நடராசா, கோ. கருணாகரம்(ஜனா), இரா. துரைரெத்தினம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழர் உரிமைப் போராட்டத்தைப் பற்றிப் பேச கருணாகரம் (ஜனா) அருகதையற்றவர் என்பது இடையூறு செய்து கூச்சல் போட்ட நபரின் வாதமாக இருந்தது என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY