துணிச்சலான அணுகுமுறையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்வோம்: ஏஞ்சலோ மெத்யூஸ்

0
276

Mathewes 22இங்­கி­லாந்­துக்கு எதி­ரான தொடர்கள் அனைத்­திலும் துணிச்சல் மிக்க அணு­கு­மு­றை­க­ளுடன் விளை­யாட சகல வீரர்­களும் தயா­ராக இருப்­ப­தா­கவும் அவர்கள் அனை­வரும் நம்­பிக்­கை­யுடன் தொடரை எதிர்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார்.

இங்­கி­லாந்­துக்கு கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள அணி எந்­த­ளவு நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்­றது என அவ­ரிடம் கேட்­ட­போதே அவர் இந்தப் பதிலை வெளி­யிட்டார்.

இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் பய­ணத்தை ஆரம்­பிப்­ப­தற்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் நேற்­றுக்­காலை செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஏஞ்­சலோ மெத்யூஸ் கலந்­து­கொண்டார்.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் உலக இரு­பது 20 வெற்­றி­யுடன் இங்­கி­லாந்து பய­ண­மா­னீர்கள், ஆனால் இம்­முறை வீழ்ச்­சி­க­ளுக்கு மத்­தியில் அதே நாட்­டிற்கு பயணம் செய்­கின்­றீர்கள்.

இது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா? என ஏஞ்­ச­லோ­விடம் கேட்­கப்­பட்­ட­போது, ‘‘கிரிக்கெட் வீரர்கள் என்ற வகையில் நாங்கள் மாறு­பா­டான பெறு­பே­று­க­ளுடன் ஒவ்­வொரு தொட­ரையும் எதிர்­கொள்­கின்றோம்.

சில வேளை­களில் வெற்­றி­வா­கை­யுடன் செல்­கின்றோம், மற்றும் சில சந்­தர்ப்­பங்­களில் தோல்­வி­க­ளுடன் செல்­கின்றோம்.

ஆனால், எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஒவ்­வொரு போட்­டி­யிலும் வெற்­றி பெ­ற­வேண்டும் என்ற உணர்­வு­டன்தான் களம் இறங்­கு­கின்றோம். எனவே, இந்தத் தொட­ரிலும் வெற்­றிக்­காக சக­லரும் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வார்கள் என நம்­பு­கின்றேன்’’ என பதி­ல­ளித்தார்.

இங்­கி­லாந்தில் நிலவும் சிதோ­ஷ்ண­நிலை, ஆடு­களம் ஆகி­ய­வற்­றுக்கு இலங்கை அணி வீரர்­களால் ஈடு­கொ­டுக்­கக்­ கூ­டிய தயார் நிலையில் இருக்­கின்­றார்­களா எனக் கேட்­ட­போது, ‘‘சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாடும் யாராக இருந்­தாலும் அந்­தந்த நாடு­களின் கால­நிலை, ஆடு­களம் ஆகி­ய­வற்­றுக்கு தங்­களைப் பழக்­கப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நான் முதல் தட­வை­யாக இங்­கி­லாந்தில் விளை­யா­டி­ய­போது அதற்­கேற்ப என்னைப் பழக்­கப்­ப­டுத்­திக்­கொண்டேன்.

அதனால் தான் என்னால் சகல துறை­க­ளிலும் பிர­கா­சிக்க முடிந்­தது. ஏனை­ய­வர்­களும் அதனை பின்­பற்­று­வார்கள் என நம்­பு­கின்றேன். ஹெடிங்­லேயில் நான் வெளிப்­ப­டுத்­திய ஆற்றல் அதி சிறந்­த­தாகும்.

இங்­கி­லாந்தில் எமது அணி ஈட்­டிய வெற்­றியை அனை­வரும் வாழ்நாள் முழு­வதும் நினை­வு­கூ­ரு­வார்கள். ஆனால், இப்­போது எதிர்­கா­லத்தை நோக்கி நாம் நக­ர­வேண்டும்.

முன்­னைய வெற்றி வர­லாற்றில் பதி­யப்­பட்­டு­விட்­டது. அது நினை­வு­கூ­ரப்­பட்டு வரு­கின்­றது. எனினும் மீண்டும் சாதித்தால் நாங்கள் நினைவில் நிற்போம். ’’ என்றார்.

‘மேலும் இங்­கி­லாந்தில் நிலவும் சிதோ­ஷ்ண­நிலை, ஆடு­க­ளங்­களின் தன்மை ஆகி­ய­வற்­றுக்கு ஒப்­பான நிலை­மை யில் நாங்கள் கடந்த சில வாரங்­க­ளாக பயிற்­சி­களில் ஈடு­பட்டோம். இங்­கி­லாந்தில் நிலவும் கால­நி­லைதான் எங்­க­ ளுக்கு முத­லா­வது சவா­லாக அமை­ய­வுள்­ளது.

அணி என்ற வகையில் நாங்கள் மிகச் சிறப்­பாக பயிற்­சி­களில் ஈடு­ பட்டோம். இந்த சவால்­களை குறிப்­பாக கால­நி­லைக்கு ஏற்ப எங்­களைத் தயார்­ப­டுத்­திக்­கொண்டு போட்­டி­களை நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்ளோம்’’ எனவும் ஏஞ்­சலே மெத்யூஸ் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றான அணி­யுடன் இலங்கை களம் இறங்கும் எனக் கேட்­ட­போது, ‘‘பொது­வாக 7 துடுப்­பாட்­டக்­கா­ரர்­களும் 4 பந்­து­வீச்­சா­ளர்­களும் விளை­யா­டுவர். உப கண்­டத்­திலும் அந்­நிய மண்­க­ளிலும் மேல­திக துடுப்­பாட்­டக்­கா­ர­ரு­டனும் 4 பந்­து­வீச்­சா­ளர்­க­ளு­ட­னுமே விளை­யாடி வரு­கின்றோம்’’ மூன்றாம் இலக்கத் துடுப்­பாட்­டத்தைப் பொறுத்­த­மட்டில் இது­வரை நாங்கள் திட­மான முடி­வுக்கு வர­வில்லை. குசல் மெண்டிஸ், லஹிரு திரி­மான்ன ஆகியோர் குறித்து கவனம் செலுத்தி வரு­கின்றோம்.

இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள இரண்டு பயிற்சிப் போட்­டி­களின் பின்னர் ஒரு முடி­வுக்கு வருவோம்.

இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜயம் இரண்டு மாத காலம் நீடிப்­பதால் இலங்கை குழாமில் 9 துடுப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுடன் 17 வீரர்கள் இடம்­பெ­று­கின்­றார்கள்.

மேலும் இங்­கி­லாந்து ஆடு­க­ளங்கள் வேகப்­பந்­து­வீச்­சுக்கு சாத­க­மாக அமை­வ­தாலும் வேகப்­பந்­து­வீச்­சாளர்கள் அதி­க­மாக பந்­து­வீசு­வ­தாலும் சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளை ­விட போதிய அளவு வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் குழாமில் இடம்­பெ­று­வது அவ­சியம்’’ என ஏஞ்­சலோ மெத்யூஸ் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை, துடுப்­பாட்ட வரி­சையில் லஹிரு திரி­மான்ன அல்­லது குசல் மெண்டிஸ் மூன்றாம் இலக்­கத்தில் விளை­யா­டினால் நான்காம் இலக்­கத்தில் தினேஷ் சந்­திமால் துடுப்­பெ­டுத்­தா­டு­வ­துடன் விக்கெட் காப்­பா­ள­ரா­கவும் விளை­யா­டுவார் என இலங்கை கிரிக்கெட் ஆலோ­சகர் அர­விந்த டி சில்வா தெரி­வித்தார்.

லஹிரு திரிமான்ன மூன்றாம் இலக்கத்தில் இடம்பெற்றால் குசல் மெண்டிஸ் ஆறாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார் எனவும் அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் குழாம்:
ஏஞ்சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), தினேஷ் சந்தி மால், திமுத் கருணாரட்ன, கௌஷால் சில்வா, லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, ரங்கன ஹேரத், தம்மிக்க பிரசாத், ஷமிந்த எரங்க, துஷ்மன்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்செய சில்வா, தசுன் சானக்க, நுவன் ப்ரதீப், சுரங்க லக்மால், டில்ருவன் பெரேரா.

LEAVE A REPLY