மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரை

0
177

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி நவகிரி நகர் பகுதியில் மோட்டார் சைக்கள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி 38ஆம் கொலனி, நவகிரி நகர் பகுதியில் புதனிரவு 10.30. மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள ஆலயத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடயவியல் பொறுப்பதிகாரி கே. ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY