காத்தான்குடி வர்த்தகர்களுக்கான முக்கிய அறிவித்தல்

0
131

federation-logo1காத்தான்குடி வர்த்தகர்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

வர்த்தக சங்கம் ஒன்றை அமைத்தல்

நமது பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை தற்போது எல்லோராலும் உணரப்பட்டுள்ளதால், சம்மேளனத்தின் அனுசரணையோடு வர்த்தக சங்கம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

எனவே, இதன் முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு பின்வரும் ஒழுங்கில் இடம்பெறவுள்ளதனால், இந்நிகழ்வில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

காலம்: 2016 மே மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை
நேரம்: இஷா தொழுகையைத் தொடர்ந்து
இடம்: மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-01

தலைவர், செயலாளர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்
காத்தான்குடி

LEAVE A REPLY