முசலி பிரதேச கிராம வீதிகளை அமைச்சர் டெனிஸ் புனரமைப்பாரா?

0
170

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

ask-questionமுசலி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுக்குளம், மேய்த்தன்வெளி வீதி, முசலி புதுவெளி வீதி, வேப்பங்குளம்பிச்சை வாணிபன்குளவீதி, புதுவெளி வீதி போன்றவற்றின் தற்போதைய நிலைமையை நேரடியாகப் பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

இப்பிரதேச வீதிகள் 1990ற்குமுன் அகலமானதாகவே இருந்தன. இவ்வீதிகள் குளக்கட்டின் மேலாகவும், அருகாமையிலும் அமைந்திருந்ததை யாவரும் அறிவர்.

குளக்கட்டிற்கு இணையாகச் சென்ற வீதிகள் இல்லாதொழிக்கப்பட்டு குளக்கட்டு வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

(உ-ம்) புதவெளிவீதி, குளங்களை கொந்த்ராத்து எடுத்தவர்கள் குளக்கட்டை மிகவும் ஒடுக்கமாக அமைத்துள்ளமையால் வாகனங்கள் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதுடன் இரு வாகனங்கள் முந்திச்செல்ல இடம் வழங்க முடியாத நிலைமையும் உள்ளது.

ஆகவே, இப்பிரதேச வீதிகளின் உண்மை நிலைமைகளை வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனுடன் இணைந்து நேரடியாக களவிஜயம் செய்து குறித்த வீதிகளை சிறப்பாகப் புனரமைத்துத் தருமாறு பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

LEAVE A REPLY