‎(Update) ஏறாவூரில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்து: ஒருவர் வபாத் (படம் உள்ளே)

0
11

‪‎சற்றுமுன்னர் ‎ஏறாவூர் ‎பிரதான ‎வீதி, வம்மியடிக்கு அருகாமையில் இ.பொ.ச. பஸ், துவிச்சக்கர வண்டியுடன் மோதியதால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த ஜமால் என்பவர் ஸ்தலத்தில் வபாத்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

2nd Update

(விஷேட நிருபர்)

ஏறாவூர் பொலில் பிரிவிலுள்ள ஏறாவூரிலுள்ள பிரதான வீதியில் இன்று (04) புதன்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று இரவு 9.30 மணியளவில் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் ஏறாவூர் புகையிரத நிலைய வீதி வழியாக ஏறாவூர் பிரதான வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது ஏறாவூர் பிரதனா வீதியிலுள்ள புதிய சந்தைக்கு முன்பாக வைத்து துவிச்சக்கர வண்டியும் பஸ் வண்டியும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஏறாவூர் ஐயங்கேணி பிரசேத்தைச் சேர்ந்த எம்.ஜமால்தீன்(57) என்பவர் படுகாயமடைந்த நிலையில் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது ஜனாஸா ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Accident Earavur

LEAVE A REPLY