மஹிந்­த­வி­னா­லேயே நாம் ஆட்­சிக்கு வந்தோம் : அவரை பாது­காப்­பது எமது கடமை: பிரதமர்

0
207

imageமஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்­சிக்கு வந்தோம். எனவே அவரை பாது­காக்க வேண்­டி­யது எமது கடப்­பா­டாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

உலகில் எந்­த­வொரு முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் இரா­ணுவ பாது­காப்பு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஆனால் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிர­தமர் சபையில் அறி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தினேஷ் குண­வர்­தன எம்.பி. முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக்ஷவின் இரா­ணுவப் பாது­காப்பு நீக்­கப்­பட்­டது தொடர்பில் பிர­த­ம­ரிடம் கேள்வி எழுப்­பினார்.

இதன்­போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தினேஷ் குண­வர்­தன எம்.பி எழுப்­பிய கேள்­வியில் நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து ஜன­நா­ய­கத்தை நிலை நிறுத்­தி­யவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். எனவே அவ­ருக்கு ஆபத்­துள்­ளது. இதனால் அவ­ருக்கு விசேட இரா­ணுவ பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

இப் பாது­காப்பு நீக்­கப்­ப­டாது என அரசு உறு­தி­மொழி வழங்­கி­யது. ஆனால் இன்று அவரின் இரா­ணுவ பாது­காப்பு நீக்கிக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இது அவ­ருக்கு உயிர் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இரா­ணுவ பாது­காப்பு நீக்­கப்­பட்­டதை அரசு மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று தனது கேள்­வியில் தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மகிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்­சிக்கு வந்தோம். எனவே அவரை பாது­காக்க வேண்­டி­யது எமது கடப்­பா­டாகும். அதனை நாம் செய்வோம்.

ஏனென்றால் தேர்தல் முடிந்­ததும் என்னை அழைத்து ஆட்­சியை மஹிந்த என்­னிடம் கைய­ளித்தார்.

அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி புஷ், பிரிட்­டனின் முன்னாள் பிர­த­ம­ரான ரோணி பிளேயர் உட்­பட முன்னாள் தலை­வர்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பே வழங்­கப்­பட்­டது.

எனக்கும், ஜனா­தி­ப­திக்கும் பொலிஸ் மற்றும் விசேட அதி­ரடிப் பாது­காப்பே வழங்­கப்­பட்­டுள்­ளது.
மஹிந்­த­வுக்கும் பொலிஸ், அதிரடிப்­படை பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேல­தி­க­மாக பாது­காப்பு தேவைப்­படின் இது தொடர்பில் கட்சித் தலை­வர்கள் கூடி ஆரா­யலாம்.

அதே­போன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் அமர்ந்து இவ்­வி­டயம் தொடர்­பாக பேசவும் தயார்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­க­வுக்கும் பொலிஸ் பாது­காப்பு தான் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு தொடர்பில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சே­கா­வுக்கு நன்கு தெரியும். எனவே அவர் பதி­ல­ளிப்பார் என கூறி­விட்டு பிர­தமர் தனது ஆச­னத்தில் அமர்ந்தார்.

இதன் பின்னர் கூச்சல் குழப்­பத்­திற்கு மத்­தியில் அமைச்சர் சரத்­பொன்­சேகா உரை­யாற்­றினார்.

மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.க்கு இரா­ணுவ பாது­காப்­பில்­லாமல் நித்­திரை செய்ய முடி­யாது. அவ­ரது பாது­காப்­பிற்­குள்ள இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பிர­புக்கள் பாது­காப்பு தொடர்பில் எந்­த­வி­த­மான பயிற்­சியும் இல்லை. அவர்கள் மஹிந்­தவின் ஆத­ர­வா­ளர்கள். கடந்த காலங்­களில் எனது பாதுகாப்பும் பறிக்கப்பட்டது.

இன்று மகிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி என்பதைவிட அவர் ஒரு எம்.பி. எனக்கும் 15 பொலிஸாரே பாதுகாப்பிற்கு உள்ளனர்.

எனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொலிஸ் பாதுகாப்பு போதுமானதாகும். இராணுவ பாதுகாப்பு அவசியமில்லை என்றார்.

-விடிவெள்ளி-

LEAVE A REPLY