தீப்பிடித்ததால் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து 3 குழந்தைகளை கீழே எறிந்த தாய்

0
138

imageதென் கொரியாவின் பியாங்டேக் பகுதியில் நான்கு மாடி கட்டடம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. கட்டடத்தில் இருந்த சிலர் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இதில், 4-வது மாடியின் ஒரு அறையில் தாயும், 3 குழந்தைகளும் சிக்கிக் கொண்டனர். ஜன்னல் வழியாக கீழே உள்ளவர்களிடம் அந்த தாய் உதவி கேட்டு கத்தினாள். கீழே இருந்தவர்கள் குழந்தைகளை வெளியே எறியும் படி கூறினர்.

இதையடுத்து 3 குழந்தைகளையும் கீழே எறிந்த தாய், அதனை தொடர்ந்து தானும் கீழே குதித்தாள். அனைவரும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்க இராணுவ வீரர்கள் இவர்களை காப்பாற்றியுள்ளனர்.

LEAVE A REPLY