(Poem) போலி

0
61

(நிஷவ்ஸ் )

 

பார்த்தேன் முகர்ந்தேன்
பல டெஸ்ட் செய்தேன்
ஒரிஜினல் தேன் என எடுத்தேன்
ஊர்த் தேன் என அறிந்து நொந்தேன்.

எங்கே ஒரிஜினல்
எங்கே ஒரிஜினல்
எங்கே சைனா பொருள் விற்கவில்லையோ
அங்கே எனக்கொரு பொருள் வேண்டும்
நெப்டியூன் கோளில்தான் தேட வேண்டும்

அப்பிள் என்பார் அழுகியிருக்கும்
ஒரேஞ் என்பார் ஒழுகியிருக்கும்.
கிரேப்ஸ் என்பார் கிராம் குறையும்
புதுசு என்பார் புளித்து நாறும்

 

போணொன்று கண்டேன்
சீனாவின் பண்டம்
ஐபோணில் கூட இல்லாத
அத்தனையும் இருக்கு போலியாய்.

 

LEAVE A REPLY