கர்பலா பாடசலையின் கல்வி முன்னேற்றத்திற்கு NFGG கைகொடுக்கிறது

0
137

NFGG Logo 1கர்பலா அல்-மனார் வித்தியாலயத்திற்கான விஜயம் ஒன்றினை NFGGயினர் தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டிருந்தார். இதன் போது பாடசாலையின் உதவி அதிபருடனும், ஏனைய ஆசிரியர்களுடனும் உரையாடிய அவர் பாடசாலையின் நிலைமைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார்.

தரம் 4 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஒரு தொண்டர் ஆசிரியை தற்காலிகமாக இருந்து வந்ததாகவும், கொடுப்பனவுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவர் தற்போது கடமைக்கு வருவதில்லை , இதனால் அந்த மாணவர்களின் கல்வி நிலை மோசமாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் உதவி அதிபரினால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு பாடசாலையின் ஏனைய கல்வி நிலவரங்கள் தொடர்பாகவும் அப்துர் ரஹ்மானுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறும் கோரப்பட்டது .

இதனை விபரமாகக் கேட்டறிந்து கொண்ட பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் குறித்த தொண்டர் ஆசிரியைக்கான கொடுப்பனவினை தனது சொந்த நிதியிலிருந்து இந்த ஆண்டு முடியும் வரை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அத்தோடு தரம் 4 இல் கற்கும் மாணவர்களுக்கான விசேட கற்பித்தல் மற்றும் பயிற்சி வகுப்புக்களை வழங்குவதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது NFGG யின் சிரேஸ்ட உறுப்பினர் ASM ஹில்மி அவர்களும் கலந்து கொண்டார்

LEAVE A REPLY