மேஜர் ஜெனரல் மானவடு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

0
87

imageமேஜர் ஜெனரல் சுமித் மானவடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டட நிர்மாணப் பணியின் போது, மரங்கள் சரிந்தது வீழுந்தமையால், தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவருக்கு, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு படையினரை கைதுசெய்தமை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சுமித் மாணவடு மலேஷியாவின் உதவி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றினார்.

LEAVE A REPLY