பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

0
150

தேவையான பொருள்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
தனியா தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 டிஸ்பூன்
கொத்தமல்லி – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளறி 5 நிமிடம் ஊற வைத்த பிறகு நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி சிக்கனைப் போட்டு 5 நிமிடம் கிளறிய பின் மிளகாய்ப் தூள், தனியா தூள், மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு உப்பு போட்டு சிக்கன் டிரை ஆகும் வரை மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும். 5 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து கிளறி விடவும்.

* சிக்கன் டிரை ஆனதும் பெப்பர் தூள், கொத்தமல்லி மேலாக தூவி கிளறி இறக்கி விடவேண்டும்.

* பெப்பர் சிக்கன் ரெடி.

* பெப்பர் தூளை மிளகாய் தூள் சேர்த்து கிளறும் போதும் சேர்க்கலாம்.

LEAVE A REPLY