மெதுவாக பந்துவீச்சு: விராட் கோலிக்கு அபராதம்

0
177

virat-kohli-hundred-21ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கொல்கத்தா 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி கேப்டன் விராட் கோலிக்கு(இந்திய ரூபாய்) ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவது 2–வது முறையாகும். ஏற்கனவே அவருக்கு (இந்திய ரூபா)ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அவர் இதுவரை (இந்திய ரூபாய்) ரூ.36 லட்சத்தை இழந்து உள்ளார். 3–வது முறையாக மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டில் சிக்கலால் கோலிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். இந்த குற்றச்சாட்டில் பெங்களூர் அணி வீரர்களுக்கு தலா (இந்திய ரூபாய்) ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல இந்த போட்டியில் வெற்றி கொண்டாட்டத்தின்போது கொல்கத்தா கேப்டன் காம்பீர் சேர்களை எட்டி உதைத்தார். இதற்காக அவருக்கு போட்டியில் பெறும் பணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY