தொடர் மிரட்டலை அடுத்து ஆப்கானை விட்டு வெளியேறினான் மெஸ்ஸியின் 5 வயது ரசிகன்

0
93

imageஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுவன் முர்தாஸ் அகமதி (வயது 5), கால்பந்து விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் உடையவன். அர்ஜெண்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகன் ஆவான்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அண்ணனுடன் விளையாடும் போது ஒரு பிளாஸ்டிக் பையை பனியனாக அணிந்து அதில் மெஸ்ஸியின் பெயரை எழுதி இருந்தான். இந்த புகைப்படம் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. இதை பார்த்த மெஸ்ஸி சிறுவனை நேரில் பார்க்க எண்ணினார். ஆனால் சூழ்நிலைகள் சரிவர அமையாததால் இருவரும் சந்திக்கவில்லை. இதை தொடர்ந்து தன்னுடைய கையெழுத்து போட்ட கால்பந்து சீருடையை ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு உதவியுடன் அனுப்பி வைத்தார்.

இது சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் உலகம் முழுவது பரவி, சிறுவன் முர்தாஸ் அகமதி உலக பிரபலமாக மாறினான். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுவனுக்கு அடையாளம் தெரியாதவர்களிடமிருந்து மிரட்டல் வரத் தொடங்கியது. சிறுவனை கடத்த போவதாகவும் தொடர்ந்து மிரட்டல் வந்தது.

இதனை தொடர்ந்து சிறுவனின் குடும்பம் அகதியாக பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து விட்டது. இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில் “ என் மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்துவிட்டோம். இஸ்லாமாபாத்தில் செலவு அதிகமாகிறது. குடும்பத்தை நடத்த முடியவில்லை. எனவே குவட்டா நகரத்திற்கு வந்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY