தனியார் மயமாகும் அரசாங்க பாடசாலைகள்

0
276

(ஜுனைட்.எம்.பஹ்த்)

imageஅரசாங்க பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்கு சேரும் மாணவர்களிடம் பாடசாலை அதிபரால் பணம் அரவிடப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெறிவிக்கின்றனர் .

காத்தான்குடியில் உள்ள பிரபல மகளீர் பாடசாலை ஒன்றில் ஏற்கனவே அதே பாடசாலையில் சாதாரண தரம் கற்று பரீட்சையில் சித்தியடைந்து தற்போது க.போ.த உயர்தரவகுப்புக்கு சேரும் மாணவர்களிடம் 2500/ = அறவிடுவதாகவும், மேலும் சில பாடசாலைகளில் 5000/= , 10000/= என அறவிடுவதாகவும் அறிய முடிகிறது.

இது தொடர்பாக் வலயகல்விப் பணிப்பாளர் M.I.சேகுஅலி (ZDO) அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது.

வசதிக்கட்டணமாக ஆகக் கூடியது 60/= ரூபாவும் பாடசாலை அபிவிருத்தி கட்டணம் 50/= தொடக்கம் 600/= வரை (பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தீர்மாணத்திற்கு அமைவாக) போன்ற தொகை தவிர்ந்த எந்த ஒரு கட்டனமுன் அறவிடப்படுவதற்கு அனுமதிக்கவில்ல.

இச் சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரத்துடன் எழுத்து மூலம் முறைப்பாடு தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் பாடசாலை சேறும் போது ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வேண்டப்பட்டால் அன்றாடம் கூலித் தொழில் செய்து தனது வயிற்றை முழுமையாக நிரப்ப முடியாமல் தவிக்கும் ஏழை பெற்றோரின் பிள்ளைகளின் கல்வியின் நிலை என்ன?

தனியார் பாடசாலை களிலே பணம் பணம் என கல்வியை வியாபாரம் செய்யும் முறை இன்று இலவச கல்வி வழங்கும் அரசாங்க பாடசாலை யிலும் ஊடுருவிவருகிறது. இவ்வாறு சென்றால் இலங்கை கல்வியில் கடுமையான பின்னடைவை எதிர்நோக்கும் நிலை ஏற்படலாம்.

உரிய உயர் அதிகாரிகள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன். பெற்றோர்களும் பொது மக்களும் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

LEAVE A REPLY