(Poem) கபாலி VS நோன்பாளி

0
12

(Mohamed Nizous)

பசியோடு பகல் கழிக்கும்
பண்படா நோன்பாளி
உசாராகி ஓடிச் சென்று
உடன் பார்ப்பார் கபாலி
இசை கேட்டு டிசைன் பார்க்கும் இவர் ஏமாளி
உசைன் போல்டாய் ஓடிவிடும் உள்ள நன்மைகள்.

பஞ்சு மெத்தை பிஞ்சு போக துஞ்சுவார் சிலர்
அஞ்சு கோப்பை கஞ்சி குடித்து விஞ்சுவார் சிலர்
கஞ்சி குடித்து நெஞ்சு எரிக்க
இஞ்சி பிலேண்டி குடிப்பார்
சஞ்சா செஞ்சி சமுசா வாங்கி
மிஞ்சி வீசுவார் சிலர்.

பஞ்சம் ஓதி கெஞ்சி கெஞ்சி
கொஞ்சம் அரிசி சேர்ப்பார்.
உஞ்சில் ஆடி பெஞ்சில் தூங்கி உள்ள நேரம் போக்குவார்.
கொஞ்சம் மக்கள் அஞ்சித் தொழுது குர் ஆன் ஓதுவார்.
நஞ்சு இல்லா நெஞ்சம் கொண்டோர் கெஞ்சி பிரார்த்திப் பார்.

மாண்பு உள்ள நோன்பு வருது தீன் வளர்ப்பதற்காய்
வீம்பு கொண்டு தீங்கு செய்தல் நீங்க வேண்டும்.
பயபக்தி அடைந்திடுவோம்
பயன் பெறுவோம்
இதைப் பற்றி இப்போதே
இறையிடம் கேட்போம்.

LEAVE A REPLY